சென்னை தாம்பரம்-ராமநாதபுரம் வாரமிருமுறை சிறப்பு விரைவு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!



சென்னை தாம்பரம் - ராமநாதபுரம் வாரமிருமுறை சிறப்பு விரைவு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வார இறுதி விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரம் - ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. 





சென்னை தாம்பரம் - இராமநாதபுரம்

அதன்படி தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் (06051) ஜூன் 21, 23, 28, 30, ஜூலை 5, 7, 12, 14, 19, 21, 26, 28 ஆகிய வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.50 மணிக்கு ராமநாதபுரம் வந்து சேரும். 

இராமநாதபுரம் - சென்னை தாம்பரம்

மறு மார்க்கத்தில் ராமநாதபுரம் - தாம்பரம் சிறப்பு ரயில் (06052) ஜூன் 22, 24 29 ஜூலை 01, 06, 08, 13, 15, 20, 22, 27, 29 ஆகிய சனி மற்றும் திங்கட்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து மாலை 03.00 மணிக்கு புறப்பட்டு  அதிகாலை 03.15 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.  

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், கடலூர், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, கல்லல், மானாமதுரை, பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று  செல்லும். 

இந்த சிறப்பு ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகளுடன் கூடிய ரயில் மேலாளர்  பெட்டி இணைக்கப்படும். 

நிற்கும் இடங்கள் :-

சென்னை தாம்பரம் 
செங்கல்பட்டு சந்திப்பு 
மேல்மருவத்தூர்
விழுப்புரம் சந்திப்பு 
பண்ருட்டி
கடலூர் திருப்பாதிரிபுலியூர்
கடலூர் துறைமுகம் சந்திப்பு
சிதம்பரம்
சீர்காழி
வைத்தீஸ்வரன் கோவில்
மயிலாடுதுறை சந்திப்பு 
திருவாரூர் சந்திப்பு 
திருத்துறைப்பூண்டி சந்திப்பு 
முத்துப்பேட்டை
அதிராம்பட்டினம்
பட்டுக்கோட்டை
பேராவூரணி 
அறந்தாங்கி
காரைக்குடி சந்திப்பு 
கல்லல்
சிவகங்கை
மானாமதுரை சந்திப்பு 
பரமக்குடி.
இராமநாதபுரம்

இந்த சிறப்பு விரைவு ரயிலில் 7 முன்பதிவில்லா பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்பட உள்ளது.




முக்கிய அறிவிப்பு :- வண்டி எண் 06052 ராமநாதபுரம் - தாம்பரம் வாரமிருமுறை சிறப்பு விரைவு ரயில் நேரம் இராமநாதபுரம் - திருவாரூர் இடையே சிறிய அளவில் மாற்றப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம் - திருச்சி விரைவு ரயில் நேரமும் 06052 தாம்பரம் சிறப்பு விரைவு ர‌யி‌ல் நேரமும் ஒன்றாக இருந்ததால் தற்போது தாம்பரம் சிறப்பு விரைவு ர‌யி‌ல் காரைக்குடிக்கு 25 நிமிடங்கள் முன்னதாக வரும் வகையில் நேரமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments