அரஃபா நோன்பை முன்னிட்டு நாளை (ஜூன்.16) கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசலில் GPM சொந்தங்கள் வாட்ஸ்ஆப் குழு சார்பில் நோன்பு கஞ்சி விநியோகம்!அரஃபா நோன்பை முன்னிட்டு நாளை (ஜூன்.16) கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசலில் GPM சொந்தங்கள் வாட்ஸ்ஆப் குழு சார்பில் நோன்பு கஞ்சி வழங்கப்பட உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசலில் அரஃபா நோன்பை முன்னிட்டு நாளை 16/06/2024 ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணியளவில் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் GPM சொந்தங்கள் வாட்ஸ்ஆப் குழு சார்பில் நோன்பு கஞ்சி வழங்க உள்ளனர். எனவே ஊர் மக்கள் அனைவரும் நோன்பு கஞ்சி வாங்க வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1977

அரஃபா நோன்பு 16/06/2024 (நாளை)
ஸஹர் முடிவு நேரம்: 4.07AM
நோன்பு திறக்கும் நேரம்: 6.40PM

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments