தொண்டி-மதுரை சாலையில் புதிய தெருவிளக்குகள் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்






தொண்டி பேரூராட்சியின் சாதாரண கூட்டம் பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் தலைமையில் நடைபெற்றது. 

துணைத்தலைவர் அழகு ராணி ராஜேந்தின், செயல் அலுவலர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தொண்டியில் தினசரி சந்தை அமைக்கவும், கடற்கரையில் பூங்கா அமைக்கவும் மானியக்கோரிக்கையில் அறிவிப்பு வெளியிட்டதற்கு தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொண்டி மதுரை சாலை மற்றும் ஈ.சி.ஆர். சாலையில் புதிய தெருவிளக்குகள் அமைத்தல், தொண்டி பழைய பேருந்து நிலையத்தில் பயன்பாடு இல்லாத நிழற்குடையை அகற்றிவிட்டு ஆதார் சேவை மையம் கட்டுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதேபோல் தொண்டி பழைய போலீஸ் நிலையம் இருந்த இடத்தில் பேரூராட்சி அலுவலகம் கட்டவும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை பேரூராட்சியில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பராமரிப்பு செய்ய அந்த நிலத்தை நில மாற்றம் செய்து தர மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 

தொண்டி பேரூராட்சி வார்டு எண் 10-ல் மேல தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்த கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments