திருவாரூர்-காரைக்குடி ரெயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மானாமதுரை வரை
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிவகங்கை நகர்குழு மற்றும் தொழிற்சங்க கூட்டு குழு கூட்டம் முருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகர செயலாளர் வக்கீல் மருது, மாவட்டகுழு உறுப்பினர் கங்கை சேகரன், நகர துணைசெயலாளர் சகாயம், பாண்டி, மாதர் சங்க பொறுப்பாளர்கள் குஞ்சரம், ஈஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-
திருவாரூர்-காரைக்குடி ரெயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும். சிவகங்கை நகராட்சியில் குப்பைகள் கொட்ட தனி இடம் அமைக்க வேண்டும். சிவகங்கை மருத்துவ கல்லூரியில் உடனடியாக எக்கோ மற்றும் இ.சி.ஜி. பரிசோதனை செய்ய டாக்டர்களை பணி அமர்த்த வேண்டும்.
பஸ்கள் இயக்க வேண்டும்
பழைய ஆஸ்பத்திரி அருகே மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள தனியார் மதுபானக்கடை மற்றும் தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் மதுபானக்கடைகளை அகற்ற வேண்டும். சிவகங்கையில் இருந்து மதுரை, மானாமதுரைக்கு இரவு 10 மணிக்கு மேல் பஸ்கள் கிடையாது. எனவே, இரவில் பஸ்களை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.