டைட்டல் பூங்கா
தஞ்சை மேலவஸ்தாசாவடியில் டைட்டல் பூங்கா 3.40 ஏக்கர் பரப்பளவில் 55 ஆயிரம் சதுரஅடியில் ரூ.27 கோடியே 13 லட்சம் செலவில் கட்டப்பட்டு வருகிறது. 4 அடுக்கு மாடி கட்டிடமாக கட்டப்பட்டு வரும் டைட்டல் பூங்கா கட்டுமான பணிகளை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் சிப்காட் செயல் இயக்குனர் பிரகாஷ், எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், முரசொலி, டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
பின்னர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நிருபர்களிடம் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் படித்த பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்காகவும், தொழில்நுட்பப் புரட்சியை உருவாக்குவதற்காகவும் இந்த டைட்டல் பூங்காவைத் தமிழக முதல்-அமைச்சர் அமைத்துள்ளார். இந்தக் கட்டுமானப்பணி முழுமையாக முடிவடைந்துள்ளதால், இப்பூங்காவை சில வாரங்களில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.
இந்தப் பூங்காவில் இதுவரை 2 நிறுவனங்கள் தொடங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 7 நிறுவனங்கள் தொடங்குவதற்கு காத்திருக்கின்றனர். எனவே, திறப்பு விழாவுக்கு முன்பே நிறுவனங்கள் முழுமையாக வந்துவிடும். மேலும் நிறுவனங்கள் முன் வந்தால் அருகிலுள்ள இடத்தில் கட்டிடம் கட்டப்படும். இதன் மூலம் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை
தஞ்சையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பது தொடர்பாக கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. இதில், பல புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதற்காக செங்கிப்பட்டியிலுள்ள காசநோய் ஆஸ்பத்திரியை அகற்றப் போவதாக சிலர் வதந்தியை உருவாக்கி பரப்பி வருகின்றனர். முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவலை உள்நோக்கத்துடன் பரப்புகின்றனர்.
அதுபோல அகற்றும் எண்ணம் இல்லை. காசநோய் ஆஸ்பத்திரி உள்ள இடத்துக்கும், சிப்காட் தொழிற்பேட்டைக்கும் தொடர்பில்லை. மேலும், காசநோய் ஆஸ்பத்திரியை தரம் உயர்த்தி, சிப்காட்டுக்கு பயனுள்ளதாக செய்யப்படும். எனவே, வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்
இவ்வாறு அவர் கூறினார்.
3.57 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு
பின்னர் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி கூறுகையில், இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் இதுவரை 3.57 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இது 5 சதவீதம் கூடுதல். இதையொட்டி, தேவையான வகுப்பறைக் கட்டிடங்கள் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளும் செய்யப்படுகின்றன என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், பயிற்சி கலெக்டர் உத்கர்ஷ்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி உஷாபுண்ணியமூர்த்தி, துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, தாசில்தார்கள் அருள்ராஜ் (தஞ்சை), மரியஜோசப் (பூதலூர்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.