புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் வாயில் கருப்பு துணி கட்டி நூதன போராட்டம்




புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் வாயில் கருப்பு துணி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாயில் கருப்பு துணி

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும், அடிப்படை பணியாளர் முதல் தாசில்தார் வரை கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் வழங்க வேண்டும், சங்கத்தினர் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று வாயில் கருப்பு துணி கட்டி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருப்பு நிற முக கவசம்

புதுக்கோட்டை தாசில்தார் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு நிர்வாகி செந்தில்குமார் தலைமை தாங்கினார். தாசில்தார் பரணி முன்னிலை வகித்தார். இதில் வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல இச்சங்கத்தை சேர்ந்த அலுவலர்கள் வாயில் கருப்பு துணி மற்றும் கருப்பு நிற முக கவசம் அணிந்து நேற்று பணியாற்றினர்.

ஆலங்குடி

ஆலங்குடி தாலுகா அலுவலகம் முன்பு வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு வட்டத்தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் துரைக்கண்ணு முன்னிலை வகித்தார். பின்னர் ஒரு நாள் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு அலுவலக பணியில் ஈடுபட்டனர். முடிவில் வட்ட செயலாளர் ரவிக்குமார் நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments