அதிராம்பட்டினம் ரெயில் நிலையத்தில் இரவில் ரெயில் வரும் பொழுது மின்விளக்குகள் எரியாததால் பயணிகள் அவதி




அதிராம்பட்டினம் ரெயில் நிலையத்தில் ரெயில் வரும் பொழுது இரவில் மின்விளக்குகள் எரியாததால் பயணிகள் அவதிப்பட்டனா்.

மின்விளக்குகள் எரியவில்லை

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சுற்றி பல கிராமங்கள் உள்ளன. இந்த ரெயில் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து ரெயிலில் ஏறி பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகிறார்கள்.

இருப்பினும் ரெயில் நிலையத்தில் இரவில் மின்விளக்குகள் எரிவது கிடையாது. நேற்று இரவு காரைக்குடியில் இருந்து திருவாரூர் செல்லும் ரெயில் அதிராம்பட்டினம் வழியாக வந்த போது ரெயில் நிலையத்தில் மின்விளக்குகள் எரியவில்லை. இரவு நேரம் என்பதால் பயணிகள் ரெயிலை விட்டு பிளாட்பாரத்தில் இறங்கும் போது தடுமாறி சென்றனர்.

அடிப்படை வசதிகள்

இது குறித்து பயணிகள் கூறியதாவது:- ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் சிறிதும் கிடையாது. இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரியாததால் பயணிகள் சிரமம் அடைகின்றனர். இரவு நேரத்தில் ரெயிலை விட்டு பிளாட்பாரத்தில் இறங்கும் போது மின்விளக்குகள் எரியாததால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

மின்தடை ஏற்பட்டால் ஜெனரேட்டர் வசதி இருக்கும் இந்த காலத்தில் இப்படியும் ஒரு ரெயில் நிலையம் உள்ளது என்பது எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. எனவே ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments