ஆவுடையார்கோவில் திருப்பெருந்துறை ஊராட்சியில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்






புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் திருப்பெருந்துறை ஊராட்சியில்  அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில்  திருப்பெருந்துறை ஊராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் எஸ் டி ராமச்சந்திரன்   அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 
திருப்பெருந்துறை ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா ராஜமாணிக்கம் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

முகாமில் ஆவுடையார்கோவில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் எஸ் டி ராமச்சந்திரன் அவர்களிடம் மனுக்கள் அளித்தனர். அந்த மனுக்களின் அடிப்படையில் விரைவில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் அனுப்பி இதற்கான தீர்வு காணப்படும் என பொதுமக்களிடம் சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments