பரமக்குடியில் பிஎஸ்-6 ரக பேருந்துகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் ராஜகண்ணப்பன்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், காரைக்குடி மண்டலம் மூலம் புதிய பிஎஸ்-6 ரக பேருந்துகள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 28) நடைபெற்றது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், பரமக்குடி எம்.எல்.ஏ செ.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சாயல்குடி முதல் சிதம்பரம் வரையிலும், ராமநாதபுரம் முதல் ராமேசுவரம் வரையிலும், ஏர்வாடி முதல் ஈரோடு வரையிலும், ராமேசுவரம் முதல் திருச்சி வரையிலும் (இரண்டு பேருந்துகள்), முதுகுளத்தூரிலிருந்து சிதம்பரம் வரையிலும், சாயல்குடியிலிருந்து திருப்பூர் வரையிலும் என ஏழு புதிய பிஎஸ்-6 ரக பேருந்துகளை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கூறியதாவது, ''தமிழகத்தில் 7000 புதிய பிஎஸ்-6 ரக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்பொழுது பரமக்குடியிலிருந்து 7 புதியபேருந்துகள் இன்று துவக்கி வைக்கப்படுகின்றன. இதேபோல் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் புதிய ரக பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.''
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.