மீமிசல் உட்பட புதுக்கோட்டை மாவட்டத்தில்
6 மருந்தகங்கள் புதிதாக திறக்கப்படுகின்றன
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 10 கால்நடை ஆம்புலன்ஸ் விரைவில் வருகிறது. 6 மருந்தகங்களும் புதிதாக திறக்கப்பட உள்ளன..
9½ லட்சம் கால்நடைகள்
மனிதர்களை போல கால்நடைகளுக்கும் உரிய மருத்துவ சிகிச்சைக்காக மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளாடு, செம்மறி ஆடு, மாடுகள், பன்றிகள் உள்ளிட்டவை என 9½ லட்சம் கால்நடைகள் உள்ளன. கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு உள்ளிட்டவற்றிற்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வசதியாக கால்நடைத்துறை சார்பில் புதுக்கோட்டை, சுப்ரமணியபுரம், கீரமங்கலம், பொன்னமராவதி, கந்தர்வகோட்டை ஆகிய இடங்களில் அரசு கால்நடை மருத்துவமனை, மருந்றதக வசதியுடன் உள்ளது
இதேபோல 106 கால்நடை மருந்தகங்கள் இயங்கி வருகிறது. மேலும் கால்நடை ஆம்புலன்ஸ் சேவை நடமுறையில் உள்ளது.
10 ஆம்புலன்ஸ்
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிதாக 10 கால்நடை ஆம்புலன்ஸ் விரைவில் வர உள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 250-க்கும் மேற்பட்ட கால்நடை ஆம்புலன்ஸ் சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். அதன்பின் புதுக்கோட்டை மாவட்டத்திற்குரிய கால்நடை ஆம்புலன்ஸ் வர உள்ளது
மாவட்டத்தில் கால்நடைகளை மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து வர முடியாத இடங்களுக்கு இந்த ஆம்புலன்ஸ் இயக்கப்பட உள்ளது.
காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரைக்கும் 2 கிராமங்களுக்கு சென்று சிகிச்சை அளிக்கப்படும். மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை அவசர சிகிச்சை மைய தொலைபேசி அழைப்புகளுக்கு சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
மருந்தகங்கள்
மருத்துவ துறையில் இயக்கப்படும் 108 ஆம்புலன்சை போல கால்நடை ஆம்புலன்ஸ் இயங்கும். இதற்காக ஏற்கனவே உள்ள 1962 என்ற தொலைபேசி எண பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கால்நடை ஆம்புலன்சில் ஒரு கால்நடை உதவி மருத்துவர், உதவியாளர் ஒருவர், டிரைவர் ஆகியோர் பணியில் இருப்பார்கள்.ஆம்புலன்சில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய அனைத்து மருத்துவ வசதிகள் இடம்பெற்றிருக்கும். இந்த ஆம்புலன்ஸ சேவை கால்நடைகள் வளர்ப்பவர்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும் என கால்நடை துறை வட்டாரத்தில் தெருவித்தனர்.
இதே போல மாவட்டத்தில் சத்தியமங்கலம், பாக்குடி, பெரிய குரும்பம்பட்டி, மண்டையூர், வைத்தூர், மீமிசல் ஆகிய 6 இடங்களில் புதிதாக கால்நடை மருந்தகங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.