கோபாலபட்டிணத்தில் நெடுங்குளத்தில் ஜமாத் சார்பாக ஆழ்துளை கிணறு பணி தொடக்கம் - அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு






கோபாலபட்டிணத்தில் நெடுங்குளத்தில்  ஜமாத் சார்பாக ஆழ்துளை கிணறு பணி தொடக்கம் - அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் நெடுங்குளத்திற்கு எப்போதும் தண்ணீர் இருக்கும் நன்நோக்கத்தில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க ஜமாஅத் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று 19-07-2024 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு ஆழ்துளை கிணற்றின் ஆரம்ப பணிகள் துவங்க உள்ளது. அதுசமயம் ஊரிலுள்ள அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு இறைவனிடம் துவா செய்து இந்த பணிகள் சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments