மயிலாடுதுறை மாவட்டம் நீடுர் நெய்வாசல் ஜாமியா நிர்வாக சபை சார்பாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கண்ணியமிக்க ஜமாத்தார்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹீ
நமது ஊரில் நடைபெறும் திருமணங்களில் நமது ஜமாத் சகோதரர்களுக்கு கீழ்கண்ட கட்டுப்பாடுகள் நிர்வாகம் சார்பாக விதிக்கப்படுகிறது.
1.மாப்பிள்ளை ஊர்வலம் உள்ளூர் மட்டும் வெளியூரிலும் நமது ஜமாத்தார்கள் நடத்தும் திருமணத்தின் பைக் ஹாரன் அடித்து வருவதும், திருமண மஹாலில் கோஷம் போடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
2.மாப்பிள்ளையின் சார்பாக நண்பர்கள் தோழன் பணம் வாங்குவதும்,பெண் வீட்டு சார்பாக தோழன் பணம் கொடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
3.திருமணம் அன்று உள்ளூர் மற்றும் வெளியூர்களில் நமது ஜமாத்தார்கள் வெடி வெடிப்பதும் நமது ஊரின் வெளியூர் ஜமாத்தார்கள் வெடி வெடிப்பதும் திருமண வீடுகளில் ஸ்பிரேயர் மற்றும் கலர் துகள்கள் அடிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
4.திருமணம் அன்று இரவு மாப்பிள்ளை தோழனாக மாப்பிள்ளையின் நண்பர்கள் பெண் வீட்டிற்கு (இரவு நேரம் விருந்துக்கு) சென்று மார்க்கத்திற்கு புறம்பான, காரியங்களில் ஈடுபடுவதும் வெளியூர் மாப்பிள்ளையின் நண்பர்கள் நமது ஊர் பெண் வீட்டிற்கு (இரவு நேர விருந்திற்கு) வந்து மார்க்கத்திற்கு புறம்பான காரியங்களில் ஈடுபடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் பெண் வீட்டிற்கு (இரவு நேரம் விருந்திற்கு) நமதூர் ஜமாத்தார்கள் மாப்பிள்ளை வீட்டின் சார்பாக உள்ளூர் மட்டும் வெளியூர் நண்பர்களை அனுப்பி வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
5.திருமண நாளில் பெண் வீடு மற்றும் மாப்பிள்ளை வீட்டில் பெண்களுக்கான நிகழ்ச்சிகளில் சொந்தங்களை தவிர வெளி ஆண்களுக்கு அனுமதி கிடையாது.
6.திருமண மேடையில் மாப்பிள்ளையின் நண்பர்களாக நிக்காஹ் நடக்கும் பொழுது ஐந்து நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்,
7.மேற்கண்ட தீர்மானங்களை மீறும் மாப்பிள்ளை வீட்டார் மீதும் கடும் எடுக்கப்படுவதுடன் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நமது நிர்வாக சபை உறுப்பினர்களால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு இந்த தீர்மானத்திற்கு ஊரின் நலன் கருதி ஜமாத்தார்கள் அனைவரும் கட்டுப்பட, வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஜாமியா மஸ்ஜித்
நிர்வாக சபை
நீடூர் நெய்வாசல்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.