ஆவுடையார்கோவிலில்விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்




ஆவுடையார்கோவிலில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். விவசாய சங்க ஒன்றிய தலைவர் சேவுகப்பெருமாள் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான விதை நெல், களைக் கொல்லி உரம் மற்றும் வேளாண்மை சார்ந்த இடுபொருட்கள் 100 சதவீதம் மானியத்தில் அரசு வழங்க வேண்டும். 2023-24-ம் ஆண்டிற்கான பயிர்காப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். ஆவுடையார்கோவிலில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜெபமாலை பிச்சை, துணைச்செயலாளர் இளங்கோவன் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments