கப்பல் போக்குவரத்து நிறுத்தம்
நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந்தேதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ‘செரியாபாணி’ என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. இந்த பயணிகள் கப்பலுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது.ஆனால் துரதிர்ஷ்டவசமாக வடகிழக்கு பருவ மழையை காரணம் காட்டி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதியுடன் பயணிகள் கப்பல் நிறுத்தப்பட்டது.
இரு நாட்டு பயணிகள் ஏமாற்றம்
பயணிகள் கப்பல் தொடங்கப்பட்டு சில நாட்களில் ரத்து செய்யப்பட்டது இருநாட்டு பயணிகள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைமுகத்திற்கு கடந்த மே மாதம் 13-ந்தேதி முதல் மீண்டும் ‘சிவகங்கை’ என்ற பெயரில் புதிய கப்பல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த கப்பல் பல்வேறு காரணங்களால் மே 17-ந்தேதிக்கும், 19-ந்தேதிக்கும் மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டு, இறுதியாக ரத்து செய்யப்பட்டு விட்டது. இது முன்பதிவு செய்த பயணிகளை அதிர்ச்சியடைய செய்தது. மேலும் இருநாட்டு பயணிகளையும் ஏமாற்றம் அடைய செய்தது.
சோதனை ஓட்டம்
இந்த நிலையில் முன்கூட்டியே இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட ‘சிவகங்கை’ கப்பல் மீண்டும் நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் சேவை வழங்குவதாக தகவல் வெளியானது.
அதன்படி சென்னையில் இருந்து புறப்பட்ட ‘சிவகங்கை’ கப்பல் கடந்த 6-ந்தேதி நாகை துறைமுகம் வந்தது. இதையடுத்து சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நாகை துறைமுகத்தில் இருந்து நேற்று ‘சிவகங்கை’ பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம் நடந்தது. காலை 7.30 மணிக்கு நாகையில் இருந்து புறப்பட்ட கப்பல் நண்பகல் 12 மணியளவில் இலங்கையை சென்றடைந்தது. இந்த பயணிகள் கப்பல் தொடங்குவது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று கப்பலை இயக்கும் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.