மணல் கடத்திய சரக்கு வேன் பறிமுதல்




ஆவுடையார்கோவில் அருகே கருங்காடு கிராமத்தில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் மற்றும் வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் பொய்யாமொழி, கிராம உதவியாளர்கள் ஆகியோர் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த சரக்கு வேனை மறித்தனர். அதிகாரிகள் நிற்பதை பார்த்த டிரைவர் சரக்கு வேன் அங்கேயே நிறுத்தி விட்டு தப்பியோடிவிட்டார். இதையடுத்து லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து நாகுடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments