நாகை-இலங்கை இடையே 16-ந்தேதி முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை முன்பதிவு தொடங்கியது




நாகையில் இருந்து இலங்கைக்கு வருகிற 16-ந்தேதி முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடங்குகிறது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

பயணிகள் கப்பல்

நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந்தேதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ‘செரியாபாணி’ என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு இருநாட்டு பயணிகள் இடையே நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் வடகிழக்கு பருவ மழையை காரணம் காட்டி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதியுடன் இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் சில நாட்களில் கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இது இரு நாட்டு பயணிகள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

‘சிவகங்கை’பயணிகள் கப்பல்

இந்த நிலையில் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைமுகத்திற்கு மீண்டும் ‘சிவகங்கை’ என்ற பெயரில் புதிய கப்பல் இயக்கப்பட உள்ளது.

இதற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட ‘சிவகங்கை’ கப்பல் கடந்த 6-ந் தேதி நாகை துறைமுகம் வந்தது. இதையடுத்து கடந்த 10-ந் தேதி பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் நடந்தது. .

16-ந்தேதி முதல் தொடக்கம்

இந்த நிலையில் நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வருகிற 16-ந் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது.

இதில் பயணம் செய்ய விரும்புபவர்கள் www.sailindsri.com என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது என கப்பலை இயக்கும் தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments