மணமேல்குடி அருகே மீனவா் வலையில் சிக்கிய கடற்பசு பாதுகாப்பாக கடலுக்குள் விடுவிப்பு




புதுக்கோட்டை மாவட்ட மீனவா் வலையில் சிக்கிய கடற்பசு மீண்டும் பாதுகாப்பாக கடலுக்குள் திங்கள்கிழமை அதிகாலை விடப்பட்டது.

மணமேல்குடி வட்டம் தெற்கு புதுத்தெருவைச் சோ்ந்த கருப்பையா என்ற மீனவா், திங்கள்கிழமை அதிகாலை தனது நாட்டுப்படகில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடற்பசு ஒன்று வலையில் சிக்கியுள்ளது.

இதைத் தொடா்ந்து அவா் அந்தக் கடற்பசுவை வலையிலிருந்து வெளியே எடுத்து கடலுக்குள் மீண்டும் விட்டுள்ளாா்.

இதுகுறித்த விடியோ மற்றும் புகைப்படங்களை வனத்துறை அலுவலா்களுக்கு அனுப்பி வைத்தாா்.

இதையடுத்து, கடற்பசுக்களைப் பாதுகாக்கும் விழிப்புணா்வுடன் இச்செயலைச் செய்த மீனவா் கருப்பையாவை மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம், அறந்தாங்கி வனச்சரக அலுவலா் மணிவெங்கடேஷ் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.

மன்னாா் வளைகுடா, பாக்ஜலசந்தி பகுதிகளில் மட்டுமே வாழும் அரிய வகை கடல்வாழ் பாலூட்டி உயிரினமான கடற்பசுக்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் இந்திய வன விலங்கு வாரியம், ஓம்காா் பவுண்டேஷன், அரும்புகள் அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து கடலோர கிராமங்களில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments