முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் ஊராட்சி ஒன்றியம், ஆற்றங்கரை மற்றும் அச்சடிப்பிரம்பு ஊராட்சிகளில் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மரகத பூஞ்சோலை பூங்காக்களை காணொளி மூலம் திறந்து வைத்தார்.
தொடர்ந்து பூங்காவில் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் ஹேமலதா, ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், தாட்கோ துறை செயற்பொறியாளர் பச்சவடிவு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வி, மண்டபம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், துணை தலைவர் பகவதி லட்சுமி முத்துக்குமார், மண்டபம் யூனியன் ஆணையாளர் சோமசுந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரபாண்டியன், ராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன்தங்கம், ஆற்றங்கரை ஊராட்சிமன்ற தலைவர் முகம்மது அலி ஜின்னா, துணைத்தலைவர் நூருல் அபான், தாட்கோ துறை உதவி செயற்பொறியாளர் சிதம்பரதாரு, மண்டபம் வனசரக அலுவலர் நித்தியா மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.