சுதந்திர தின விழா
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார். அதேபோல் விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஜோதிமணி எம்.பி. தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி மாணவர்களிடம் பேசினார்.
மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி அன்புதாசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய பின்னர் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து பா.ஜனதா சார்பில் மாவட்ட பொதுச்செயலாளரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி அமைப்பாளருமான சண்முகசுந்தரம் தலைமையில் தேசிய கொடியுடன் வாகன ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் விராலிமலை காமராஜ் நகரிலிருந்து தொடங்கி கடைவீதி, செக்போஸ்ட் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வழியாக சென்று மீண்டும் காமராஜ் நகரில் நிறைவு பெற்றது. இதில் பா.ஜனதா தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மணமேல்குடி
மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒன்றிய பெருந்தலைவர் பரணி கார்த்திகேயன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார். இதில் துணை தலைவர் சீனியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், அரசமணி மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் மணமேல்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா நடேசன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் துணை தலைவர் முத்துக்குமார், ஊராட்சி செயலாளர் முருகானந்தம், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஆவுடையார்கோவில்
ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் உமாதேவி தலைமை தாங்கி தேசிய கொடிைய ஏற்றி வைத்தார். ஆவுடையார் கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாகரன் பேசுகையில், இந்த நாடு சுதந்திரம் அடைய தியாகிகள் எவ்வளவு தியாகம் செய்தனர் என்றும், அந்த சுதந்திரத்தை நாம் எவ்வாறு பேணி காக்க வேண்டும் என்றும் உரையாற்றினார்.
இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமரன், சுந்தரபாண்டியன், பாலசுந்தரி கூத்தையா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர்கள், பள்ளி மாணவிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மணமேல்குடி வட்டார வள மையத்தில் 78 வது சுதந்திர தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆசிரியர் பயிற்றுநர் திரு சசிகுமார் சிறப்பு ஆசிரியர்கள் திரு.கோவேந்தன் திருமதி நதியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.