7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில் உயர்கல்வியில் சேர்ந்த 46 மாணவர்களுக்கு பாராட்டு




புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயின்று `நீட்' தேர்வு உள்ளிட்ட தகுதி தேர்வுகளில் வெற்றி பெற்று 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரிகள், பல் மருத்துவக்கல்லூரிகள், கால்நடை மருத்துவக்கல்லூரி, அகில இந்திய தொழில்நுட்ப கல்லூரி, மத்திய பல்கலைக்கழகம், சட்டக்கல்லூரி ஆகியவற்றில் இடம் பிடித்த 46 மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு விழா கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் அருணா தலைமை தாங்கி மாணவர்களை பாராட்டி வாழ்த்து தொிவித்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவ மாணவர்களுக்கு ஸ்டெதஸ்கோப், கோட், பொன்னாடை அணிவித்து, பள்ளிக்கல்வித்துறை சார்பில் `நீட்' பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும், தலைமையாசிரிய ஒருங்கிணைப்பாளர்களுக்கும் பொன்னாடை அணிவிக்கப்பட்டது. விழாவில் கலெக்டர் அருணா பேசுகையில், ``7.5 சதவீத ஒதுக்கீட்டில் இடம் பிடித்த மாணவர்கள் உயர்கல்வி பயிலும்போது எவ்வித இடையூறுகள் ஏற்படினும், அவற்றை சவாலாக ஏற்றுக்கொண்டு நீங்கள் உறுதி கொண்ட குறிக்கோளை அடைந்திட வேண்டும். இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் இரட்டை இலக்க எண்ணாக உள்ள சாதனை அடுத்த ஆண்டு மூன்று இலக்க எண்ணாக அதிகரிக்க வேண்டும்'' என்றார். இந்நிகழ்வில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம், புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ரமேஷ் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments