புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 65 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே தெரிவித்துள்ளார்.
65 ரவுடிகள் கைது
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரவுடிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும், குற்றங்கள் நிகழாமல் தடுக்கவும், பொதுமக்கள் அச்சமின்றி இருப்பதை உறுதி செய்யவும், பொது அமைதியை நிலைநாட்டவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதில் கடந்த 3 மாதங்களில் நடத்தப்பட்ட ரவுடி வேட்டையில் மொத்தம் 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 65 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களுடன் தொடர்புடைய நபர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாவட்டத்தில் 6 ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதில் கொடூர ஆயுதங்களை போலீசார் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிணை ஆணை
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட முக்கிய ரவுடியின் வீடு மற்றும் உடையாளிப்பட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட முக்கிய ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதில் முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் பிடிஆணை நிலுவையில் இருந்த 284 குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 375 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.ரவுடிகள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், அவர்கள் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணிக்கவும் 61 ரவுடிகள் நன்னடத்தை பிணை ஆணை பெறுதவற்கு சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர்களுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. அதில் 57 ரவுடிகளுக்கு கடந்த 3 மாதங்களில் நன்னடத்தை பிணை ஆணை பெறப்பட்டுள்ளது.
குண்டர் சட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு ரவுடிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் நடமாட்டங்கள், செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீதான குற்ற வழக்குகளில் விரைந்து தண்டனை பெறுவதற்கு சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயல்படும் ரவுடிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள் என புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.