திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (AXB613) விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாததால் விமானத்தை தரையிறக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மாலை 5.40 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டது.
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. அதாவது விமானத்தின் சக்கரம் உள்ளே செல்லாததால் விமானத்தை மீண்டும் தரையிறக்க விமானிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். விமானத்தின் எரிபொருளைக் குறைக்கும்பொருட்டு விமானம் வான்பரப்பிலேயே சுற்றி வந்தது
திருச்சிக்கும் புதுக்கோட்டைக்கும் இடைப்பட்ட இடத்திலேயே விமானம் சுற்றி வருகிறது. விமானத்தில் கிட்டத்தட்ட 141 பயணிகள் இருக்கின்றனர். எரிபொருள் நிறைந்து இருக்கும்போது தரையிறக்கினால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், எரிபொருளை குறைக்கும்பொருட்டு விமானம் புதுக்கோட்டையில் உள்ள நார்த்தாமலை சுற்றுவட்டாரப் பகுதி வானிலேயே சுற்றி வருகிறது. அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் இதுவரை 13 முறை சம்பந்தப்பட்ட விமானம் சுற்றியுள்ளது. பாக்குடி, மலம்பட்டி, ஆவூர், முக்கணாமலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விமானம் வானில் வட்டமடித்து வந்த்தது
திருச்சி விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ள நிலையில், காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். 4 தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் இருந்தது
திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (AXB613) விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாததால் பதற்றம் ஏற்பட்டது. மாலை 5. 40 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானம், 2 மணி நேரத்திற்கும் மேலாக வானிலேயே வட்டமடித்த நிலையில், 8.15 மணியளவில் தற்போது திருச்சியிலேயே பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.
திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (AXB613) விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாததால் பதற்றம் ஏற்பட்டது. அப்போது துரிதமாக செயல்பட்ட இரு விமானிகள், பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினர்.
திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (AXB613) விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாததால் பதற்றம் ஏற்பட்டது. மாலை 5. 40 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானம், 2 மணி நேரத்திற்கும் மேலாக வானிலேயே வட்டமடித்த நிலையில், 8.15 மணியளவில் தற்போது திருச்சியிலேயே பாதுகாப்பாக தரையிறங்கியது.
விமானத்தில் எரிபொருள் அதிகமாக இருந்ததால், விமானத்தை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. ஒருவேளை லேண்டிங் கியர் இல்லாமல் விமானம் தரையிறங்கினால் தரையில் மோதி புகை அல்லது தீ ஏற்பட்டு மிகப்பெரிய விபத்து ஏற்பட வாய்ப்பிருந்ததால், விமானத்தை தரையில் இறக்காமல் முடிந்தளவு எரிபொருளை குறைக்கும் முயற்சியில் விமானக்குழு ஈடுபட்டது.
நீண்டநேர பெரும் போராட்டத்திற்கு பிறகு விமானத்தில் சிக்கிய 144 பயணிகளையும், விமானி Iqrom Rifadly Fahmi Zainal மற்றும் துணை விமானி Maitryee Shrikrishna Shitole பத்திரமாக தரையிறக்கினர்.
பயணிகள் பாதுகாப்பாக இறக்கப்பட்ட நிலையில், தரையுடன் மோதியதால் விமானத்தில் புகை ஏற்பட்டது. சரியான நேரத்தில் நிதானமாக செயல்பட்ட விமானி மற்றும் துணை விமானி (Iqrom Rifadly Fahmi Zainal மற்றும் Maitryee Shrikrishna Shitole) 2.30 மணி நேரத்திற்கும் மேலாக போராடி அனைவரது உயிரையும் காப்பாற்றினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.