தமிழ்நாட்டில் எஸ்.ஐ பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, காவல் சார்பு ஆய்வாளர்கள் (SI)(தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிகளுக்கு நேரடி தேர்வு 2025-க்கு விண்ணப்பங்கள் வரும் ஏப்ரல் 7-ம் தேதி முதல் தொடங்குகிறது. மொத்தம் 1,299 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் காவல் சார்பு ஆய்வாளர்கள் (SI)(தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிகளுக்கு 2025-ம் ஆண்டுக்கான நேரடி தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 1,299 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் வரும் ஏப்ரல் 7-ம் தேதி முதல் தொடங்குகிறது.
வயது வரம்பு
காவல் சார்பு ஆய்வாளர் பதவிக்கு 20 வயது நிறை பெற்றிருக்க வேண்டும் மற்றும் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் வகுப்பு பிரிவுகளுக்கு தளர்வு உண்டு.
வயது வரம்பு
காவல் சார்பு ஆய்வாளர் பதவிக்கு 20 வயது நிறை பெற்றிருக்க வேண்டும் மற்றும் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் வகுப்பு பிரிவுகளுக்கு தளர்வு உண்டு.
வகுப்புவாரி இடஒதுக்கீடு
தற்போதுள்ள விதிகளின்படி, வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் சதவீதம், பற்றாக்குறை காலிப்பணியிடங்களைத் தவிர அனைத்து பதவிகளுக்கும் பொருந்தும். பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதார்களுக்கான இடஒதுக்கீடு விவரங்களை அறிக்கையில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறை ஒதுக்கீடு - தாலுகா மற்றும் ஆயுத படையில் தலா 20 சதவீத காலிப்பணியிடங்கள்
சார்ந்துள்ள வாரிசுதாரருக்கான ஒதுக்கீடு - மீதமுள்ள 80 சதவீத காலிப்பணியிடங்களில் 10 சதவீதம் (9 +1)
விளையாட்டு ஒதுக்கீடு - மீதமுள்ள 80 சதவீத காலிப்பணியிடங்களில் 10 சததவீதம்.
சம்பள விவரம்
காவல் சார்பு ஆய்வாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கு பொது விண்ணப்பதார்களுக்கு தமிழ் மொழி தகுதித் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்கூறு அளத்தல் தேர்வு, உடற்தகுதி தேர்வு, உடல்திறன் போட்டி, நேர்முகத்ட் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
துறை சார்ந்த விண்ணப்பதார்களுக்கு முதல்நிலை எழுத்துத் தேர்வு, முதன்மைத் தேர்வு, சான்றிதழ் சாரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நிரப்பப்படுவார்கள்.
இறுதியாக தேர்வு செய்யப்பட்டவர்கள் தற்காலிக பட்டியல் வெளியிடப்படும். அதனைத்தொடர்ந்து, மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் பணி நியமனம் வழங்கப்படும்
எப்படி விண்ணப்பிப்பது?
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.tnusrb.tn.gov.in/ என்ற தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன்வ் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விரிவான அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்படும். ஏப்ரல் 7-ம் தேதி முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம். இப்பணியிடங்களுக்கு ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்.
வரிசை எண் | நிகழ்வு | தேதி |
I | அறிவிக்கை தேதி | 04.04.2025 |
II | இணைய வழி விண்ணப்பம் துவங்கும் தேதி | 07.04.2025 |
III | இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி தேதி | 03.05.2025 |
IV | எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி | பின்னர் அறிவிக்கப்படும். |
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.