சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
பாலியல் தொல்லை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 55), தச்சு தொழிலாளி. இவர் கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். பின்னர் அந்த வீட்டில் இருந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பன்னீர்செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
20 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கின் விசாரணை புதுக்கோட்டை மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கனகராஜ் நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட பன்னீர்செல்வத்துக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், வீட்டில் நுழைந்து பாலியல் தொல்லையில் ஈடுபட்ட குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
தண்டனை காலத்தை ஏககாலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து, பன்னீர்செல்வம் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.