வேள்வரை நடுநிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள்: கல்வி வளர்ச்சி நாளாகக் கோலாகலக் கொண்டாட்டம்!



ஆவுடையார்கோவில் ஒன்றியம் வேள்வரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா இன்று 'கல்வி வளர்ச்சி நாளாக' மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

விழாவை முன்னிட்டு, பள்ளியில் காமராஜரின் உருவப்படத்திற்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளும், விழாவில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments