புதுக்கோட்டை ஏ.ஆர். சிக்னலில் உள்ள வேகத்தடையில் வெள்ளைக்கோடு போட்ட ஊர்க்காவல் படை பெண்ணுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
வேகத்தடை
புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை பகுதிஅருகே உள்ள சாலையில் ஏ.ஆர். சிக்னல் உள்ளது. இந்த சிக்னலில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இங்கு வேகத்தடைகள் இருக்கிறது என்பதை வாகன ஓட்டிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் வெள்ளைக்கோடுகள் போடப்படாமல் இருந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது வேகத்தடையை கவனிக்காததால் தடுமாறி கீழே விழுந்ததில் பரிதாபமாக இறந்தார்.
வெள்ளைக்கோடு
இந்தநிலையில் புதுக்கோட்டை ஊர்க்காவல் படையில் பணிபுரியும் சரோஜா என்பவர் நேற்று நள்ளிரவில் வாகனங்கள் எதுவும் வராத நேரத்தில் அப்பகுதியில் உள்ள இரண்டு வேகத்தடைகளுக்கும் தனது சொந்த செலவில் பெயிண்ட் வாங்கி அவரே வெள்ளைக்கோடுகளை போட்டுள்ளார். இந்த பகுதி பழைய அரசு மருத்துவமனை, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், புதுக்கோட்டை நகர போக்குவரத்து போலீஸ் அலுவலகம், தீயணைப்பு நிலையம், நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களுக்கு செல்லும் முக்கிய பகுதியாக இருப்பதால் வாகனங்கள் அதிகமாக சென்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஊர்க்காவல் படையில் பணிபுரியும் பெண் ஒருவர் தாமாக முன்வந்து வேகத்தடையில் வெள்ளைக்கோடுகள் போட்டுள்ளார். இதற்கு வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.