கட்டுமாவடி கடைவீதியில் கழிவறை கட்டப்படுமா?




மணமேல்குடியை அடுத்த கட்டுமாவடி, பெரிய மீன் மார்க்கெட் உள்ள பகுதியாகும். மேலும் கட்டுமாவடியில் ஏராளமான மீன் கடைகள், நண்டு கம்பெனிகள், இறால் கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. தினமும் மீன்களை வாங்குவதற்கு அறந்தாங்கி, புதுக்கோட்டை, காரைக்குடி, திருச்சி, பட்டுக்கோட்டை என பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகளும், பொதுமக்களும் வருகின்றனர். அதிகாலையில் மீன் விற்பனை தொடங்குவதால் பொதுமக்களும், வியாபாரிகளும் கட்டுமாவடி வரும் நிலையில், கழிவறை வசதி இல்லாமல் அவதி அடைகின்றனர். 

எனவே இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு கட்டுமாவடியில் பொது கழிவறை கட்டித்தர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments