மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எல்லைக்குள் பிடித்ததாக...
கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் 240-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதனை நம்பி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இந்நிலையில் கடற்கரையில் இருந்து 5 நாட்டிக்கல் மைல் தொலைவிற்குள் நாட்டுப்படகு மீனவர்களும், அதற்கு மேல் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க எல்லை வகுக்கப்பட்டுள்ளது. இதில் 5 நாட்டிக்கல் தொலைவுக்கு உள்ளாக கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது.
போராட்டம்
இதனை நாட்டுப்படகு மீனவர்கள் மீன்வளத்துறையிடம் புகார் அளித்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட விசைப்படகுகள் மீது மீன்வளத்துறையினர் அபராதம் விதித்தனர். மேலும் அவர்களுக்கு அரசு வழங்கும் மானியம், டீசல் ரத்து செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர் சங்கத்தினர், மீன்வளத்துறை அதிகாரிகள் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகக்கூறி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து இன்று முதல் கடலுக்கு செல்லாமல் உள்ளனர்.
மேலும் அரசு அதிகாரிகள் உரிய தீர்வு எட்டும் வரை போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர். விசைபடகு மீனவர்கள் காலவைரயற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடலில் விசைப்படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாததால் பொதுமக்கள் இன்றி கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
ஆதார், ரேஷன் கார்டு...
இதுகுறித்து மீனவ சங்க தலைவர்கூறுகையில், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆதார், வாக்காளர், ரேஷன் கார்டுகளை அதிகாரிகளிடம் ஒப்படைக்க போவதாக தெரிவித்து உள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.