புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள திட்ட அலுவலகம் முன்பு நேற்று புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பெண்கள் இயக்கம் சார்பில் ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது. புரட்சிகர பெண்கள் இயக்க செயலாளர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் லதா முன்னிலை வகித்தார். ஆவுடையார்கோவில் தாலுகா சாத்தியங்குடி ஊராட்சியில் உள்ள இண்டனூர் கிராமத்தில் 25 ஆண்டுகளாக சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் அவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தும், பலகட்டமாக போராட்டம் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து, நேற்று பெண்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் புதுக்கோட்டை திட்ட அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து, கோரிக்கைகள் குறித்து ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் புரட்சிகர பெண்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.