சொந்த வீட்டை அரசு அலுவலகம் அமைக்க தானமாக வழங்கிய குடும்பம்: ஒக்கூரில் நெகிழ்ச்சி!



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா, ஒக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், தங்களின் பூர்வீக வீட்டை அரசு அலுவலகம் அமைக்க தானமாக வழங்கி மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றனர்.

ஒக்கூர் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட காலஞ்சென்ற திரு. கல்யாணராமன் - திருமதி. சகுந்தலா (எ) சௌந்தரநாயகி தம்பதியரின் வாரிசுகளான திரு. நாராயணன் மற்றும் திருமதி. விஜயலட்சுமி ஆகியோர், தங்கள் கிராமத்தில் அரசுப் பணிகள் தடையின்றி நடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த உயரிய முடிவை எடுத்துள்ளனர்.

தானமாக வழங்கப்பட்ட இடம்
தங்களுக்குச் சொந்தமான, சுமார் பல லட்சம் மதிப்புள்ள பூர்வீக ஓட்டு வீடுடன் கூடிய இடத்தினை, ஒக்கூர் கிராம நிர்வாக அலுவலகம் (VAO Office) அமைப்பதற்காக எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அரசுக்கு விலையில்லாமல் வழங்கியுள்ளனர்.

ஆவணங்கள் ஒப்படைப்பு
இதற்கான நில தான ஆவணங்களை, ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில், உயர்திரு. வட்டாட்சியர் அவர்களிடம் வாரிசுதாரர்கள் வழங்கினர். இந்நிகழ்வின் போது தோழர் மு.க. முஜிபுர் ரகுமான் உடனிருந்தார்.

கிராம மக்கள் பாராட்டு
சொந்த பந்தங்கள் வாழ்ந்த பூர்வீக வீட்டை பொதுநலனுக்காக அரசுக்கு வழங்கிய திரு. நாராயணன் - திருமதி. விஜயலட்சுமி குடும்பத்தாரை வட்டாட்சியர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி, தங்களது நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments