நற்பணியில் இணைவோம்! GPM பைத்துல்மாலுக்கு ஜகாத் வழங்கவும், புதிய உறுப்பினராக இணையவும் அழைப்பு!




கோபாலப்பட்டிணத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் உயரிய நோக்கில் GPM பைத்துல்மால் கமிட்டி மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

பத்தாண்டுகால மக்கள் சேவை
ஊர் மக்களின் பேராதரவோடும், இறைவனின் கிருபையோடும் இந்த அமைப்பு கடந்த பத்தாண்டுகளாகப் பல்வேறு நற்பணிகளை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக, மருத்துவ உதவி: போதிய வசதியின்றி தவிக்கும் நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சைக்கான நிதியுதவி அளித்தல்.
கல்வி உதவி: பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்வி கனவு நனவாகக் கல்விக்கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்குதல்.
தொழில் உதவி: வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் சுயதொழில் தொடங்கி கண்ணியமாக வாழத் தேவையான வாழ்வாதார உதவிகளைச் செய்தல்.

புதிய உறுப்பினர் சேர்க்கை
நமது கமிட்டியின் சேவையை இன்னும் விரிவுபடுத்தவும், வலுப்படுத்தவும் தற்போது புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. கமிட்டியில் இணைந்து சமூகப் பணியாற்றும் விருப்பமுள்ளவர்கள் வருடம் ரூபாய் 2000 (இரண்டாயிரம்) ஓராண்டு சந்தா செலுத்தி உறுப்பினராகச் சேர்ந்து கொள்ளலாம். ஊர் நலனில் அக்கறை கொண்ட அனைவரும் இதில் இணைந்து பணியாற்ற வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

ஜகாத் வழங்க வேண்டுகோள்
இந்த ஆண்டும் தகுதியுடைய ஏழை எளிய மக்களுக்கு ஜகாத் மற்றும் தர்ம நிதியினை முறையாகக் கொண்டு சேர்க்கும் பணியை கமிட்டி மேற்கொண்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களின் ஜகாத் தொகையினை GPM பைத்துல்மால் அலுவலகத்தில் நேரில் செலுத்தி, அதற்கான முறையான ரசீதுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்
 அலுவலகம்: 9597183017
 M.பாவாமரைக்காயர்: 9442714786

நிர்வாகம்
GPM பைத்துல்மால் கமிட்டி,
கோபாலப்பட்டிணம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments