சவுதி அரேபியா, ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரத்தின் (IWF) மனிதவள மேம்பாட்டு அணியான 'விழி' அமைப்பின் சார்பில், 2026ஆம் கல்வியாண்டிற்கான 4-வது இணையவழி கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி இன்று (மே 16, சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.
மாணவர்களின் எதிர்கால உயர்கல்விக்கு வழிகாட்டும் நோக்கில், "வெளிநாடுகளில் மருத்துவம், பொறியியல், அறிவியல் மற்றும் பல்வேறு உயர்கல்வி வாய்ப்புகள்" என்ற தலைப்பில் இந்தச் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச கல்வி ஆலோசகர் சிறப்புரை
இணையவழியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், புகழ்பெற்ற சர்வதேச கல்வி ஆலோசகரும், சமூக ஆர்வலரும், UK & India 'U2Uni' கல்வி ஆலோசனை மையத்தின் முதன்மை செயல் அதிகாரியுமான (CEO) லண்டன் ஃபைசல் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். அவர், உலகளாவிய ரீதியில் தற்போதைய சூழலில் உள்ள சிறந்த உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் வெளிநாட்டுப் படிப்புகள் குறித்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விரிவான ஆலோசனைகளை வழங்கவுள்ளார்.
நிகழ்ச்சி நேர விபரங்கள்
சவுதி / குவைத் / கத்தார் / பஹ்ரைன்:இரவு 7:00 மணி
ஐக்கிய அரபு அமீரகம் (UAE):இரவு 8:00 மணி இந்தியா:இரவு 9:30 மணி
பங்கேற்கும் முறை
இந்நிகழ்ச்சி 'ஜூம்' (Zoom) செயலி வழியாக நேரலையாக நடைபெறவுள்ளது. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள், தற்போது படித்து வரும் மாணவர்கள் மற்றும் தங்களது பிள்ளைகளின் எதிர்கால உயர்கல்வியைத் திட்டமிடும் பெற்றோர்கள் அனைவரும் இதில் இலவசமாகக் கலந்துகொள்ளலாம்.
Zoom இணைப்பு
"எதிர்கால தலைமுறையை சரியான கல்வி வழிகாட்டுதலுடன் உருவாக்குவோம்" என்ற இலக்கோடு நடைபெறும் இப்பயனுள்ள சர்வதேச கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில், வளைகுடா நாடுகளிலும் இந்தியாவிலும் உள்ள தமிழ் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ரியாத் 'விழி' மனிதவள மேம்பாட்டு அமைப்பினர் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.