புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் முஸ்லிம் ஜமாஅத்தின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று 10/07/2026 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்குப் பிறகு பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் ஜமாஅத் முக்கியஸ்தர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி (5/7/2024) கோபாலப்பட்டிணம் முஸ்லிம் ஜமாஅத்திற்குப் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு, கடந்த இரண்டு வருடங்களாகப் பல்வேறு பொதுப்பணிகளை மேற்கொண்டு வந்தனர். இவர்களது பதவிக் காலம் கடந்த 5/7/2026 அன்றுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஜமாஅத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்த இந்த ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டது.
கூட்டத்தில், ஊர் மக்களின் பல்வேறு ஆலோசனைகள் மற்றும் கருத்துகளின் அடிப்படையில், தற்போதைய நிர்வாகமே இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு (2028 வரை) நீடிப்பதாக முழுமனதாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஊர் மக்களின் இந்த ஏகோபித்த முடிவிற்கு ஜமாஅத் நிர்வாகமும் தனது முழு ஒப்புதலை வழங்கியது. இதனை அடுத்து, கோபாலப்பட்டிணம் முஸ்லிம் ஜமாஅத் தற்போதைய நிர்வாகத்தின் பதவிக் காலம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பு செய்யப்படுவதாக ஊர் பொதுமக்கள் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஜமாத் நிர்வாகிகள்
தலைவர்: R.S.M.அன்சாரி, செயலாளர்: S.முகமது இபுராஹிம், பொருளாளர்: மு.மு.பசீர் அலி, துணைத் தலைவர்: R.M.A.நெய்னா முகமது, துணைத் தலைவர்: R.அப்துல் காதர், துணைச் செயலாளர்: S.செய்யது முகமது, இணைச் செயலாளர்: A.அலிஅக்பர்
உயர்மட்ட நிர்வாக குழுவினர்
O.S.M.முகமது அலி ஜின்னா, J.முகமது யூசுப், M.ராஜா முகமது, V.E.உமர் ஹத்தா, V.M.உமர், K.M.S.ஜின்னா, K.S.அப்பாஸ் கான், மங்களம் சாதிக் பாட்சா, R.ருக்னுதீன், Y. ஜகுபர்
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.