வெளியூர் மரண அறிவித்தல்: கோலேந்திரத்தைச் சேர்ந்த ராவுத்தர் நைனா முகம்மது அவர்கள்



கோலேந்திரம் ஜமாத் தலைவர் முகைதீன் பிச்சை அவர்களின் மகன் ராவுத்தர் நைனா முகம்மது அவர்கள் இன்று 14/07/2026  செவ்வாய்க்கிழமை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை 15/07/2026 புதன்கிழமை காலை 11.30 மணிக்கு கோலேந்திரம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யுங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29:57)
 
தகவல்: ஷேக் அலாவுதீன், ஜமாஅத் செயலாளர் 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments