பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெறும் 7,500 விவசாயிகள் தங்களது விவரங்களை பதிவேற்ற வேண்டும் மாவட்ட ஆட்சியர் தகவல்



பி.எம். கிசான் திட்டத்தின் மூலம் பயனடைந்து வரும் 7,500 விவசாயிகள் தங்களது விவரங்களை விவசாயிகளின் தகவல் தொகுப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

பி.எம். கிசான் திட்டம்
மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற, விவசாயிகள் அனைவரும் தங்களது விவரங்களை விவசாயிகளின் தகவல் தொகுப்பில் உடனடியாகப் பதிய வேண்டும். விவசாயிகள் தங்களின் பதிவை மேற்கொள்ளவில்லை என்றால் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் எந்தவொரு நிதியுதவியும், சலுகைகளும் கிடைக்காது. குறிப்பாக, பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் தங்கள் விவரங்களை பதிவு செய்வது மிக அவசியமாகும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் பி.எம். கிசான் திட்டத்தின் மூலம் பயனடைந்து வரும் சுமார் 7,500 விவசாயிகள் இதுவரை தங்களது விவரங்களை விவசாயிகளின் தகவல் தொகுப்பில் பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர். இதனால், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய ரூ.6 ஆயிரம் நிதியுதவி வராமல் நிறுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த 9 மாதங்களாக இது குறித்துத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் பல விவசாயிகள் இன்னும் பதிவு செய்யாமல் இருப்பது மாவட்டத்திற்குப் பெரிய இழப்பாகும்.

விவசாயிகளின் தகவல் தொகுப்பு
நிதியுதவி நிறுத்தப்பட்ட பிறகு, `பணம் வரவில்லை' என்று முறையிடுவதில் எந்தப் பயனும் இல்லை. பதிவு செய்யாததே அதற்கு ஒரே காரணமாக இருக்கும் என்பதால், இறுதி நேரத்தில் மாவட்ட நிர்வாகம் எதுவும் செய்ய இயலாது. பி.எம். கிசான் திட்டத்தில் ஏற்கனவே பயனடைந்து வருபவர்கள், 2019-ம் ஆண்டிற்கு முன்பிருந்தே பட்டாதாரர்களாகவோ அல்லது பயனாளிகளாகவோ இருப்பவர்கள், அசல் பட்டாதாரர் இல்லாது, தற்போது நிலம் வாரிசுதாரர்கள் (மகன்-மகள்) பெயருக்கு மாற்றியிருப்பவர்கள், பிறரிடம் இருந்து நிலம் வாங்கி, பெயர் மாற்றம் செய்துள்ள புதிய பட்டாதாரர்கள்.

தங்கள் விவரங்களை பதியாத 7,500 விவசாயிகளின் பட்டியல் வட்டார வாரியாக, கிராம வாரியாக மற்றும் குக்கிராமம் வாரியாக பிரித்து மாவட்ட நிர்வாகத்திடம் தயாராக வைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பட்டியலில் உள்ள விவசாயிகள் அனைவரும் உடனடியாகத் தங்களின் தரவுகளை விவசாயிகளின் தகவல் தொகுப்பில் பதிவேற்றி தங்களுக்கு உரிய அரசு நலத்திட்ட பயன்களைத் தடையின்றிப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

இந்த தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments