கோபாலப்பட்டிணத்தின் இரண்டு மையங்களில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம்!



கோபாலப்பட்டிணத்தில் நேற்று ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.

இப்பகுதியில் உள்ள அனைத்துக் குழந்தைகளும் விடுபடாமல் சொட்டு மருந்து பெறுவதை உறுதி செய்யும் வகையில், கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பால்வாடி மற்றும் காட்டுக்குள்ள பள்ளிவாசல் அருகில் உள்ள பால்வாடி ஆகிய இரண்டு முக்கிய மையங்களில் இந்த முகாம் சிறப்பான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

நேற்று காலை 7:00 மணிக்குத் தொடங்கிய இந்த முகாம், மாலை 5:00 மணி வரை தொய்வின்றி நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்களது ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஆர்வமுடன் அழைத்து வந்து போலியோ சொட்டு மருந்து செலுத்திச் சென்றனர்.

இம்முகாமில் சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கலந்துகொண்டு குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்கும் பணியை மேற்கொண்டனர். கிராம மக்களின் முழு ஒத்துழைப்போடு இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments