கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசலில் ஆஷூரா நோன்பு கஞ்சி விநியோகம்: இன்று மற்றும் நாளை வழங்க GPM சொந்தங்கள் ஏற்பாடு!



ஆஷூரா நோன்பை முன்னிட்டு, கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் இன்று ஜூன்.25 மற்றும் நாளை ஜூன்.26 ஆகிய இரண்டு தினங்கள் நோன்பு கஞ்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மார்க்கத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆஷூரா நோன்பு இன்று மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் இன்று மதியம் 3:30 மணி அளவிலும், அதேபோல் நாளை வெள்ளிக்கிழமை மதியம் 3:30 மணி அளவிலும் நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்படவுள்ளது.

ஆஷூரா நோன்பின் சிறப்பு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஆஷூரா நாளில் நோன்பு நோற்பது, அதற்கு முந்தைய ஆண்டின் பாவங்களுக்கு பரிகாரமாக இருக்கும் என நான் அல்லாஹ்விடம் நம்புகிறேன்." - முஸ்லிம் (1162)
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் அடுத்த ஆண்டு உயிருடன் இருந்தால், 9 ஆம் நாளிலும் நோன்பு நோற்பேன்." - ஸஹீஹ் முஸ்லிம் (1134)

எனவே, நமது ஊர் பொதுமக்கள் அனைவரும் குறித்த நேரத்திற்கு வருகை தந்து, நோன்பு கஞ்சியை பெற்றுச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அறிவிப்பு:GPM சொந்தங்கள், கோபாலப்பட்டிணம்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments