அதிகம் டி.வி. பார்த்தால் விரைவில் மரணம்




அதிகம் டி.வி. பார்த்தால் விரைவில் மரணம்,

தொலைக்காட்சிகள் எல்லாம் இப்போது தொல்லைக்காட்சிகளாகி வருகின்றன. இது தெரிந்துதான் கடந்த நூற்றாண்டிலேயே தொலைக்காட்சிக்கு “இடியட் பாக்ஸ்” என்று பெயர் வைத்தார்களோ என்னவோ.
ஆனால் மணிக்கணக்கில் தொலைக்காட்சி முன்பு கதியாக கிடப்பவர்களை இளம் வயதிலேயே மரணம்நெருங்குவதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்கர்கள் முன்னிலை
அனைத்திலும் முன்னிலை வகிக்கும் அமெரிக்கர்கள் டிவி பார்ப்பதிலும் முன்னிலைதான். ஒரு நாளில் அமெரிக்கர்கள் 5 மணி நேரம் டிவி பார்ப்பதாகவும், ஐரோப்பியர்கள் 3-லிருந்து 4 மணி நேரம் டிவி பார்ப்பதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
இளம் வயதில் மரணம்
ஒரு நாளில் 2 மணி நேரத்துக்கு அதிகமாக டிவி பார்த்தால் சர்க்கரை வியாதி வரும் என்றும், 3 மணி நேரத்துக்கு அதிகமாக டிவி பார்த்தால் இதய அடைப்பு ஏற்படும் என்றும், அதிக நேரம் டிவி பார்த்தால் இளம் வயதிலேயே மரணம் சம்பவிக்கும் என்றும் அமெரிக்காவின் “ஹார்வர்டு ஸ்கூல் ஆஃப் பக்ளிக் ஹெல்த்” என்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
சோம்பேறிகளுக்கு எச்சரிக்கை
இந்த ஆராய்ச்சிகளின் நோக்கம் உடலுழைப்பை அதிகப்படுத்தச் சொல்வது மட்டுமில்லாமல், டிவி பார்ப்பது போன்ற சோம்பேறித்தனமான செயல்களில் அதிக நேரத்தை செலவிடுவதால் ஏற்படும் தீமைகளை எடுத்துச் சொல்வதுதான் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் பிராங்க் ஹு மற்றும் கிராண்ட்வெட் ஆகியோர் தெரிவித்தனர்.
1970-லிருந்து 2011 வரை டிவி பார்ப்பது தொடர்பான ஆராய்ச்சி முடிவுகளையும் கருத்தில் கொண்டே இவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.
ஆனால் இந்த ஆய்வு முடிவுகள் நிச்சயம், நம்மூர் டிவி நேயர்களை கண்டிப்பாக பாதிக்க வாய்ப்பில்லை. அதிலும், காலை 10 மணிக்கு டிவியை ஆன் செய்து விட்டு அரிவாள் மனையும், காய்கறிகள் சகிதமுமாக உட்கார்ந்து, டிவியில் வரும் நாடகங்களின் கேரக்டர்கள் கதறி அழுவதைப் பார்த்து தாங்களும் குமுறி அழுது புலம்பும் நம்மூர் சீரியல் ரசிகைகளை நிச்சயம் இது ஒன்றும் செய்ய முடியாது. மரணமே இந்த ‘சீரியல் கில்லர்’களைப் பார்த்து மரணம், ‘தற்கொலை’ செய்து கொள்ளும்!.  நாள் முழுவதும் "மெகா சீரியல்களைப்' பார்த்து அழும் நம்மவர்கள் யோசித்துப் பார்ப்பார்களா?


Post a Comment

1 Comments

  1. தொடர்ந்து அழுதால் மனஇறுக்கம் குறையும் அல்லவா? இதனால்தான் நம்ம ஊரு பொம்பளைங்க t.v பாக்கறாங்க....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.