என்றும் உதவும் கரங்கள்’ அறக்கட்டளை சார்பில் கோபாலப்பட்டிணத்தில் பெண்களுக்கான 5-ஆம் ஆண்டு திருக்குர்ஆன், ஹதீஸ் போட்டி: கேள்வி வெளியீடு




அன்பார்ந்த சகோதரிகளே தாய்மார்களே நாம் அனைவரும் மேன்மை பொருந்திய ரமலான் மாதத்தை அடைந்திருக்கிறோம். இந்த மாதத்தில் அதிகமாக நல்ல அமல்களை செய்தும்,திக்ருகளை செய்தும் அனைத்தையும் படைத்த இறைவனாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வால் உலக மக்களுக்காக இந்த புனிதமிகு மாதத்தில் இறக்கியருளப்பட்ட திருகுர்ஆனை வாசிக்கவும், மார்க்கத்தோடு நம்மைத் தொடர்புபடுத்திக் கொள்ளவேண்டும் இன்னும் அதன்படி என்றென்றும் நம்முடைய வாழ்க்கையை அமைத்து இறைவனுக்கு நெருக்கமான கீழ்படிந்து வணங்கிய அடியாராக வாழ்ந்து மரணிக்க வேண்டும்
நமது கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக ரமலான் மாதத்தை முன்னிட்டு வருடாந்திர குர்ஆன் மற்றும் ஹதீஸ் கேள்வி பதில் போட்டி நடைபெறும்.

அந்த வகையில் இந்த ரமலான் மாதத்திலும் அனைவரும் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களோடு தொடர்பில் இருக்க வேண்டும் என்ற தூய எண்ணத்தில் பெண்களுக்கான ஐந்தாம் ஆண்டு கேள்வி-பதில் போட்டியை நடத்த உள்ளோம்.

வெற்றி பெறுவோரை சிறப்பிக்கும் வகையில் முதல் மூன்று பரிசுகளும், பங்கேற்பவர்களுக்கு சிறப்பு பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும் இந்த போட்டிக்கான கேள்விகள் வெளியிடப்படுகிறது.
கேள்விக்கான பதில்கள் வருகிற 10- மார்ச் 2026 செவ்வாய்க்கிழமை அன்று இரவு சமர்ப்பிக்கப்பட வேண்டும் பதில் தாள்களை இரவுத் தொழுகை நடைபெறும் அனைத்துப் பள்ளிகளிலும் வைக்கப்பட்டிருக்கும் பதில் பெட்டிகளில் இரவு 09.00 மணிக்கு முன்பு போட வேண்டும்

குறிப்பு:
ஒரு வீட்டின் குடும்ப உறுப்பினர்களில் (தாய், சகோதரி, மகள், மருமகள்) ஒரு பதில்தாள் மட்டுமே ஏற்கப்படும்.
கேள்வி எண்ணையும் கேள்வியையும் முழுவதுமாக குறிப்பிட்டு பதில்கள் சுருக்கமாக எழுதப்பட்டிருக்க வேண்டும். (முழு ஹதீஸையும் எழுத கூடாது.
A4-தாளில் பதில்கள் எழுதப்பட்டு பின் (Pin) செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
பதில் தாள்கள் தவறினால் குழு பொறுப்பேற்காது.

இந்த போட்டியில் விதிமுறைகள், நிபந்தனைகளில் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்களை ஏற்படுத்தவும், தவறு ஏதும் இருக்கும் பட்சத்தில் முன் அறிவிப்பின்றி பதில் தாளை நிராகரிக்கும் அதிகாரத்தையும் அறக்கட்டளை கொண்டுள்ளது.

எனவே மிக முக்கியமாக பதில்தான்கள் ஒரே குடும்பம், ஒரே நபரால் ஒன்றுக்கும் மேற்பட்டு எழுதப்பட்டிருக்கிறது என்பது போட்டிக்கான சிறப்புக்குழுவின் ஆய்வில் தெரியவந்தால் அதை சார்ந்துள்ள அத்தனை பதில்தான்களும் நிராகரிக்கப்படும்.

பரிசுக்கு உட்பட்டு வரும் போட்டியாளர்களின் பதில்தால்கள் ஒரே குடும்பத்தினரால் ஒரே சாயலில் இரண்டு அல்லது மூன்று பதில் தாள்கள் இருக்கும் பட்சத்தில் அந்த பதில்தால்கள் காரணம் இன்றி நிராகரிக்கப்படும்.

பதில்தாளில் போட்டியாளரின் பெயர் மற்றும் தந்தை பெயர் அல்லது கணவர் பெயர் மேலும் தந்தையின் தொடர்பு எண் அல்லது கணவரின் தொடர்பு எண் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்த போட்டியில் கோபாலப்பட்டிணம் பெண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.

இன்ஷா அல்லாஹ் தயாராக இருங்கள்! இன்றே குர்ஆனை திறந்து இறைவசனங்களை உற்று நோக்குங்கள்! அதை மனதில் நிலைநிறுத்தி தங்களது அன்றாட வாழ்க்கையில் அமல்படுத்துங்கள்! அல்லாஹ் நம் அனைவருக்கும் அவனுடைய மார்க்கத்தில் தெளிவையும் எந்நிலையிலும் அதை பின்பற்றி நடக்கும் நற்பாக்கியதையும் அவனுக்காக மட்டும் செய்யும் தூய எண்ணத்தையும் தந்து அருள் புரிவானாக! அல்லாஹ் நமது இயலாமகைளையும், தவறுகளையும் மன்னித்து நமது இந்த சிறிய முயற்சியை அங்கீகரித்துமறுமையில் அதன் கூலியை முழுமையாக தந்தருள் புரிவானாக.


மார்க்க மற்றும் சமூக பணியில்.
என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை, கோபாலப்பட்டிணம், புதுக்கோட்டை மாவட்டம் 91-7418964895-9344794889


கேள்வி டவுன்லோட் செய்ய 





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments