மரண அறிவித்தல்



கோபாலபட்டிணம் ஹிரா 3-வது தெருவை  சேர்ந்த கொட்டியா செய்யது அபுதாஹீர் அவர்களின் தகப்பனார் சாகுல் ஹமீது அவர்கள் (01.10.2018) அதிகாலை 05.30 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.



அன்னாரது ஜனாஸா இன்று காலை லுஹர் தொழுகைக்கு முன்பு (01-10-2018) ஜீம்மா பள்ளி அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும்.வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் சகோதரர்கள் அனைவரும் அவரின் ஜனாசா தொழுகையில் கலந்து கொண்டு எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக்கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!

'மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கிராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கிராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கிராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

Post a Comment