கோட்டைப்பட்டினத்தில் மின்மாற்றியில் பழுது பார்த்துக் கொண்டிருந்த தற்காலிக மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு




புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப் பட்டினம் ராம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன் (48), இவர் அதே பகுதியில் தற்காலிக மின்வாரிய ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கொடிக்குளம் மின் பகிர்மானத்திலிருந்து மின் துண்டிப்பு அறிவிக்கப்பட்டு, பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்துள்ளது. அதனடிப்படையில் குமரேசன் மின்மாற்றியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கையில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். 

இதனை அடுத்து மின் ரத்து செய்யப்பட்டிருந்த வேளையில் எப்படி மின்சாரம் தாக்கப்பட்டது என்று கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அஜாக்கிரதையாக வேலை பார்த்த மின்துறை அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலை கோட்டைப்பட்டினத்தில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதுப்பு ஏற்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments