நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே ‘சிவகங்கை’ என்ற பெயரில் பயணிகள் கப்பல் சேவை நடந்து வந்தது. புயல், பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த கப்பல் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டது.
இதையடுத்து டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் கப்பல் சேவை தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அப்போது புயல் தாக்கம் காரணமாக காங்கேசன் துறைமுகத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
அங்கு சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று முதல் நாகை-இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையேயான பயணிகள் கப்பல் சேவை தொடங்கியது. இந்த சேவையை கப்பல் நிறுவனத்தின் இயக்குனர் சுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து 77 பயணிகளுடன் நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் புறப்பட்டு சென்றது. மறுமார்க்கத்தில் 80 பயணிகளுடன் இலங்கையில் இருந்து புறப்பட்ட கப்பல் மாலையில் நாகை துறைமுகம் வந்து சேர்ந்தது. இரு மார்க்கத்திலும் இந்த கப்பல்களில் பயணம் செய்த பயணிகள் உற்சாகத்துடன் பயணித்தனர்.
இதுகுறித்து கப்பல் நிறுவனத்தின் இயக்குனர் சுந்தர்ராஜன் கூறும்போது, “வாரத்தில் 6 நாட்கள் (செவ்வாய்க்கிழமை தவிர்த்து) இலங்கை-நாகை இடையே இருமார்க்கத்திலும் கப்பல் சேவை நடைபெறும். 250 பயணிகள் பயணிக்கும் வகையில், பயண நேரம் குறைவாக செல்லக்கூடிய அதிவேக புதிய கப்பல் சேவையை இந்த மாதம் தொடங்க உள்ளோம்” என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.