கஜா புயல்: கொத்து கொத்தாக மாரடைப்பால் உயிரிழந்த விலங்குகள்.. கண்ணீர் வரவழைக்கும் புகைப்படங்கள்



கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட வனவிலங்குகள் பலவும் கொத்துக்கொத்தாக இறந்து கரை ஒதுங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வங்கக்கடலில் உருவான கஜா புயல் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை வேதாரண்யம் அருகில் கரையை கடந்தது. இந்த புயல் பல மனித உயிர்களை பலிவாங்கியது.






வேதாரண்யத்தில் சேதம் அதிகமாக இருக்கிறது.   கோடியக்கரை சரணாலயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.   அங்குள்ள பறவைகளும், மான்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. ஆறுகாட்டுத்துறை கடற்கரை பகுதியில் 20க்கும் மேற்பட்ட மான்கள், காட்டுப் பன்றிகள், காட்டு குதிரைகள் செத்து கிடக்கும் காட்சி நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது. 

கோடியக்கரை காட்டுயிர் உய்விடம் 1967ஆம் ஆண்டு கலைமான்களைக் காப்பதற்காக உருவாக்கிய வனஉயிரின உய்விடம் ஆகும். இதன் பரப்பளவு 17.26 சதுர கி.மீ ஆகும். இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இங்கு காணப்படும் தனிச்சிறப்பு வாய்ந்த சதுப்புநிலங்களில் பல்வேறு வகையான அரிய பறவையினங்களைக் காணலாம். 

இங்கு காணப்படும் விலங்குகள்: கலைமான், நரி, புள்ளி மான், காட்டுப்பன்றி, முயல், காட்டுக் குதிரைகள், ஆமை, குரங்கு.

Post a Comment