த.மு.மு.க சார்பாக மீமிசலில் 02/03/2019 மாபெரும் சாலை மறியல் போராட்டம்



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் ஆர்.புதுப்பட்டினம் கிராமத்தில் முஸ்லிம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் கட்டிடம் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. எனவே மாணவர்கள், ஆசிரியர்கள் மேல் விழுந்து உயிர் இழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. 

இதன் காரணமாக கட்டிடத்தினை இடித்து அப்புறப்படுத்த கோரி 2015-ஆம் ஆண்டு முதல் பல முறை மாவட்ட கல்வி அலுவலர், பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் எழுத்து மூலம் மனுவாக நேரடியாகவும், பதிவு அஞ்சல் மூலம் அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்காத அனைத்து துறை அதிகாரிகளை கண்டித்தும், பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த கோரியும் வருகின்ற 02/03/2019 சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் மீமிசல் செக் போஸ்ட் (கிழக்கு கடற்கரைச் சாலையில்) அருகில் த.மு.மு.க சார்பாக மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற இருக்கிறது.

அதுசமயம் M. ஜியாவுல் ஹக், ஒன்றிய துணை தலைவர் தலைமை தாங்குகிறார்.

அனைவரையும் போராட்ட களத்திற்கு அழைப்பது.....
தமுமுக & மனிதநேய மக்கள் கட்சி ,
ஆர்.புதுப்பட்டினம் கிளை, 
ஆவுடையார் கோவில் ஒன்றியம்,
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.

தொடர்புக்கு: 9942002536, 9524576948, 7395867990

Post a Comment