தாய் சேய் நல வாகன சேவைத் திட்டத்தின் பயன்பாட்டுக்காக 15 புதிய ஊர்திகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிடப்பட்ட செய்தி:-
தாய்மார்களையும்,சேய்களையும் மருத்துவமனைகளில் இருந்து பாதுகாப்பாக அவர்களது இல்லத்துக்கு அழைத்துச் செல்லவும், உடல் நலம் குன்றிய பெண்கள், அவர்களது குழந்தைகளை அழைத்துச் செல்லவும் தாய்-சேய் நல வாகன சேவைத் திட்டம் கடந்த 2013-ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது.
தற்போது இந்தத் திட்டத்தின்கீழ், 146 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. அதன் வாயிலாக இதுவரை 3 லட்சத்து 95 ஆயிரத்து 205 தாய்மார்கள் பயனடைந்துள்ளனர். இந்த நிலையில், அந்தத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் மேலும் 15 புதிய வாகனங்கள் பொது மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.