தமிழ்நாடு மின்சார வாரியம் மின்சார கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தினால் 3.5 சதவீதம் லாபம் அளிக்கப்படும் என்று புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.
பொதுவாக மின்சார கட்டணம் கணக்கு எடுக்கப்பட்ட பிறகு 20 நாட்களுக்குள் பணம் செலுத்த வேண்டும்.
சில வாடிக்கையாளர்கள் பயணம் மற்றும் வெளியூர்களில் தங்கியிருப்பதால் முன்கூட்டியே மின்சார கட்டணத்தைச் செலுத்திவிடுகிறார்கள். இப்படி முன்கூட்டியே மின்சார கட்டணம் செலுத்துபவர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு 3.5 சதவீத லாபம் அளிக்கப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
முன்கூட்டியே மின்சார கட்டணம் செலுத்துவார்களுக்கான லாபம் வழங்கும் முறை 2019-2020 நிதி ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது.
மின்சார கட்டணத்தைக் கூடுதலாகச் செலுத்துவது ஆன்லைனில் செய்ய முடியுமா அல்லது நேரில் தான் செய்ய வேண்டுமா என்ற விவரங்கள் குறித்து மின்சார வாரியம் எந்த விவரங்களையும் குறிப்பிடவில்லை.
நன்றி: நியூஸ்18
