கோபாலப்பட்டிணம் பகுதியில் குடிநீர் விநியோகக் குழாய்களில் பொதுமக்கள் யாரும் மின்மோட்டார்கள் பொருத்தி சட்டவிரோதமாகத் தண்ணீரை உறிஞ்சக் கூடாது என்று உள்ளாட்சி நிர்வாகத்தின் சார்பில் மிகக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உள்ளாட்சி அலுவலகப் பணியாளர்கள் நேரில் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பில், குடிநீர் விநியோகம் செய்யப்படும் நேரங்களில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் மின்மோட்டார் அமைத்து தண்ணீரை இழுக்கக் கூடாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முறையாகக் குடிநீர் கட்டணம் செலுத்தி அதற்கான ரசீதை வைத்திருப்பவர்களே ஆனாலும், விதியை மீறி சட்டவிரோதமாக மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுவது கண்டறியப்பட்டால், அவர்களது குடிநீர் இணைப்பு (Pipeline) எவ்வித முன்னறிவிப்புமின்றி உடனடியாகத் துண்டிக்கப்படும். அவ்வாறு ஒருமுறை துண்டிக்கப்படும் பட்சத்தில், அவர்களுக்கு ஆயுள் காலத்திற்கும் மீண்டும் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் உள்ளாட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி அலுவலக விதிகளின்படி விடுக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பிற்கு அப்பகுதி மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.