மீமிசலில் AIFT சார்பில் நடைபெற்ற முத்தலாக் தடை மசோதா எதிர்ப்பு கண்டன கூட்டம்..!



ஜன.06., புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் கடைவீதியில் முஸ்லீம்களின் சரியத் சட்டத்தில் தலையிடும் வகையில் மத்திய அரசு கொண்டுவர துடிக்கும் "முத்தலாக் தடை மசோதா"வை எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம் 05/02/2019 செவ்வாய்க்கிழமை மாலை 06.00 மணியளவில் நடைபெற்றது.


இக்கூட்டம் அல்-இஸ்லாஹ் பவுண்டேசன் டிரஸ்டின் உயர்மட்ட ஆலோசனை குழு உறுப்பினர் மௌலவி. SA. முஹம்மது இத்திரீஸ் பாகவி அவர்கள் தலைமையில், கடற்கரை வட்டார இஸ்லாமிய ஜமாஅத் பொதுமக்கள் முன்னிலையில், MK. முஹம்மது மான்சூர் இம்தாதி ஹழ்ரத் அவர்கள் கிராஅத்துடன்,AIFT ஆலோசனை குழு  S. சாதிக் பாட்சா அவர்கள் வரவேற்புரையுடன் நடைபெற்றது.

இதில் விசிக கட்சியின் மாநில துணை செயலாளர் செ. கலைமுரசு, SDPI மாநில பொது செயலாளர் B. அப்துல் ஹமீது, தமுமுக&மமக ஒன்றிய தலைவர் S. அஜ்மல் கான், மீனவர் சங்க மாநில செயலாளர் அரசை.ஷாஜகான் ஆகியோர் கண்டன குரல் எழுப்பினர்.

இப்பொதுகூட்டத்தின் முக்கிய நிகழ்வாக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், எழுத்தாளர் திரு. வே.மதிமாறன் அவர்கள், மௌலவி S. முஹம்மது ஜுபைர் சிராஜி ஹழ்ரத் ஆகியோர் முஸ்லீம்களின் உரிமையில் கைவைக்கும் மத்திய அரசின் முத்தலாக் சட்ட மசோதாவை எதிர்த்து கண்டன உரை நிகழ்த்தினர்.





இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் - 01

   ஷரியத் சட்டத்தில் தலையிடும் வகையில் "முத்தலாக் தடை மசோதா" என்ற பெயரில் மத்திய அரசு அதை சட்டமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும்  நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை வன்மையாக இப்பொதுகண்டிக்கிறது.

தீர்மானம் - 02
   
     மக்கள் ஒற்றுமையை குலைக்கும் வகையில் பேசி வரும் மதவெறிப்பிடித்த தலைவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் - 03

     கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு கேட்ட ₹15 ஆயிரம் கோடியை மத்திய அரசு தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும் என இப்பொதுக்கூட்டம் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் - 04

     இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை சேதமாக்கும் வகையில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற CBI போன்ற அமைப்புகளை தவறாக கையாளும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தி வரும் ஜனநாயக போராட்டத்தை இப்பொதுக்கூட்டம் பாராட்டுகிறது.

தீர்மானம் - 05

    வாக்கு இயந்திரங்களின் நம்பிக்கை போய்விட்டதால் எதிர்க்கட்சிகள் மற்றும் மக்கள் இயக்கங்களின் கோரிக்கைகளை ஏற்று மீண்டும் வாக்கு சீட்டு முறையை கொண்டுவர தேர்தல் ஆணையம் வரும் பொது தேர்தலில் அமல்படுத்திட வேண்டும் என்று இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

இறுதியாக AIFT ஆலோசனை குழு உறுப்பினர் K. ராவுத்தர் நெய்னா அவர்கள் நன்றியுரை நிகழ்த்த கூட்டம் நிறைவுபெற்றது.

இதில் 500க்கும் மேற்பட்ட ஜமாத்தார்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு :
அல்-இஸ்லாஹ் பவுண்டேசன் டிரஸ்ட் (ECR),
(சமூக தீமைகள் ஒழிப்பு கூட்டமைப்பு)
05/02/2019

Post a Comment