தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவிக்கு கே.எஸ்.அழகிரி நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் செயல் தலைவர்களாக, ஹெச். வசந்த குமார், கே. ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் எம்.பி. கே.எஸ்.அழகிரி, கடலூர் லோக்சபா தொகுதியின் உறுப்பினராக இருந்தவர். காங்கிரஸ் சார்பில் ஒரு முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஒரு முறையும் தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார்.