ஆவுடையார்கோவிலில் கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி



புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலில் கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அறந்தாங்கி கோட்ட கலால் துறை சார்பில் நடத்தப்பட்ட இப்பேரணியை ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் ஜமுனா தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.
கோட்ட கலால் அலுவலர் து.செல்வவிநாயகம் , வருவாய் ஆய்வாளர் சி.முத்தரசு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மது அருந்துதல் மற்றும் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் நடத்தப்பட்ட இப்பேரணி, வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, நான்கு ராஜ வீதிகள் வழியாக சென்று மீண்டும் தொடங்கிய இடத்திலேயே நிறைவடைந்தது.

பேரணியில், தேர்தல் துணை வட்டாட்சிர் அ.ஜபருல்லா, வருவாய் ஆய்வாளர்கள், கிராமநிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்தோர் பங்கேற்று, விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பிச் சென்றனர்.

Post a Comment